தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்று வெற்றி பெற சில பயனுள்ள குறிப்புகள். ஆர். மனோஜ் –
மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை
அடிப்படையாக மனதில்
வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
- உங்கள் வெற்றிக்கான பொறுப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. உங்கள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பவர்கள் நீங்களே. நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததை சாதிக்காமல் இருப்பதற்கு உங்கள் பெற்றோரையோ, ஆசிரியரையோ அல்லது நண்பர்களையோ குற்றம் கூறுவதை நிறுத்துங்கள்.
- நீங்கள் வெற்றி பெறுவதற்கு, உங்கள் வாழ்க்கைக்கு, சூழ்நிலைக்கு ஏற்றபடி செய்யவேண்டியது என்ன என்பதை உணருங்கள். அவற்றை அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை, செய்யவேண்டிய செயல்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்து, உங்கள் நேரத்தையும், உங்களிடம் உள்ள திறமை மற்றும் கற்கும் சாதனங்களையும் முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
- உங்கள் கவனம் உங்களுடைய நெறிமுறை, குறிக்கோள் மற்றும் அடிப்படை கொள்கைகளின் மேல் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் படிப்பிலும், வாழ்கையிலும் வெற்றி அடைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றும், செய்யவேண்டியவற்றில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள். மற்றவர்களுடைய தேவைக்கேற்பவோ, வேண்டுதலுக்காகவோ, உத்தரவின் பேரிலோ எதுவும் செய்யவோ, செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் கல்வியில் வெற்றி என்ற குறிக்கோளை முதன்மையானதாகவும் மற்ற எந்த குறிகோளையும் விட முக்கியமானதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். கல்வி துறையில் வெற்றி பெற செய்யவேண்டிய செயல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதும், முதன்மையாக என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பதும் நீங்களாகவே இருக்கட்டும். மற்றவர்களுடைய, ஆர்வமோ, குறிகோள்களோ, தேவைகளோ உங்கள் கவனத்தை திசைதிருப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.
சிறந்த கல்வி கற்கும்
முறை SQRURR வழிமுறை
ஆய்வு: SURVEY
முதலில் நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை மேலோட்டமாக ஆய்வு செய்து, அது எதை பற்றியது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தலைப்புகள் மற்றும் உபதலைப்புகள், படங்கள், இணைகூற்று, வழிமுறை அட்டவணை, வரைபடம் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்துங்கள். நீங்கள் படிக்க போகும் பாடத்திற்க்கும் ஏற்கனவே படித்த பாடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா அல்லது முன்பாடத்தின் அடுத்த படலமா என்பதை அறியுங்கள்.

கேள்வி. QUESTION
அடுத்து பாடத்தின் கடைசியில் உள்ள அல்லது உபதலைப்புகளின் பின் உள்ள கேள்விகளை படியுங்கள். தலைப்புகள் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை உருவாக்குங்கள். அந்த பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள கேள்வி வங்கியின் (QUESTION BANK) உதவியையும் நாடலாம்.

படித்தல்
READ
அதன் பிறகு அந்த பாடத்தை/ பகுதியை பொறுமையாக நிறுத்தி வாசியுங்கள். முக்கியமான வாத்தைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். சுருக்கவிதிமுறை (ஃபார்முலா), பொருள் வரையரை (டெஃபினிஷன்) ஆகியவற்றின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள். படிக்கும் பொழுதே நீங்கள் ஏற்கனவே படித்த கேள்விகளுடன் சம்பந்தப்படுத்தி அந்த கேள்விகளுக்கான விடை என்ற அடிப்படையில் படியுங்கள். கஷ்டமான தலைப்புகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

புரிந்துகொள்ளுதல். UNDERSTAND
நீங்கள் படித்ததை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். புரிந்தவற்றை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் வடிவமைத்து கொள்ளுங்கள். முடிந்த வரை அந்த பாடம் சம்பந்தபட்டவைகளுக்கு தினசரி வாழ்க்கையில் என்ன பயன்பாடு உள்ளது என்றும் தொடர்பு படுத்த முயலுங்கள்.

ஒப்பித்தல் RECITE
நீங்கள் புரிந்து கொண்டதை சுருக்கமாக உங்களுடைய சொந்த வார்தைகளில், ஒப்புவித்து பாருங்கள். முடிந்த வரை நீங்கள் ஏற்கனவே படித்த அனைத்து கேள்விகளுக்கும் விடைகளை ஒப்புவித்து பழகுங்கள். முக்கியமான வார்த்தைகள் மற்றும் சுருக்கவிதிமுறை (ஃபார்முலா), பொருள் வரையரை (டெஃபினிஷன்) ஆகியவற்றை எழுதி பழகுங்கள்.

மறுஆய்வு
REVEIW
நீங்கள் படித்தவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி பார்த்துக்கொள்ளுங்கள். சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் படித்ததை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

படிக்கத் தயாரவதற்கு முன் கவனத்தில் வைத்து கொள்ளவேண்டிய முக்கியக் குறிப்புகள்.
- முதலில் சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள். அந்த இடம் நிரந்தரமாக படிக்கும் இடமாகவும், அதிக கவனம் செலுத்தக்கூடிய இடமாகவும், கவனச்சிதறல் ஏற்படுத்தக்கூடிய சூழ்லைகள் இல்லாத இடமாகவும் இருத்தல் அவசியம். படிப்பதற்க்கு மற்ற இடங்களை பயன் படுத்துவது இந்த குறிப்பிட்ட இடம் கிடைக்காத நேரங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உறுதியாக பின்பற்றுங்கள்.
- படிக்கும் இடத்தை மிகவும் சுத்தமாகவும், ஒழுங்கமைதியுடைய இடமாகவும் எப்பொழுதும் வைத்திருங்கள். நீங்கள் படிக்க தீர்மானித்த பாடங்கள், சம்பந்தபட்ட புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் மட்டுமே அவ்விடத்தில் அந்நேரத்தில் இருக்க வேண்டும்.
- தனிப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் விளக்கு அவ்விடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- தொலைபேசி, அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இதர கவனச்சிதறல் ஏற்படுத்தும் சாதனங்கள், அருகாமையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்தால் அதை பின்னணியில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது உங்கள் கவனத்தை சிதறடிக்காதவாறு பார்த்துகொள்ளுங்கள்.
- சரியான உயரம் மற்றும் வடிவமுடைய மேசை, நாற்காலிகளை பயன்படுத்துங்கள். அவை உங்கள் உடலுக்கு குறிப்பாக உங்கள் இடுப்பு மற்றும் முதுகுக்கு சிரமத்தை கொடுக்காதவைகளாக இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தரையில் உட்கார்ந்து படிக்கும் பொழுது உங்கள் முதுகு அதிகமாக வளைந்து சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் படிப்பதற்க்கு ஏதுவான, உயரமுள்ள ஏதாவது ஒரு பொருளின் மேல் புத்தகத்தை வைத்து படிக்கவும். படுக்கையில் படுத்தவாறு படிக்க கூடாது, ஏனென்றால் அது சோம்பேறித்தனத்தையும், உறக்கத்தையும் ஏற்படுத்தும்.
திட்டமிட்டு ஒழுங்குபடுத்துதல்
- முதலில் நீங்கள் படித்து முடித்தது, படிக்க வேண்டிய பகுதிகள் எவை என்ற அடிப்படையில் பாடப்பகுதியை பிரித்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை பகுதிகளாக பிரித்து அவற்றை மாதம் / வாரம் / நாள் அடிப்படையில் திட்டமிட்டு படிக்க வேண்டிய அட்டவணையை உருவாக்குங்கள் . முடிந்தவரை அட்டவணையின் அடிப்படையில் படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள் .
- ஒவ்வொரு நாள் இறுதியிலும், வார இறுதியிலும் அட்டவணையின் அடிப்படையில் எவ்வளவு முடித்துள்ளீர்கள், எந்தெந்த பாடத்தில் பின் தங்கி உள்ளீர்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு தக்கவாறு அட்டவணையை மாற்றி அமையுங்கள்.
- மாதிரி வினாத்தாள்களின் (MODEL QUESTION PAPER) அடிப்படையில் ஒவ்வொரு வகையான வினாக்களுக்கான விடைகளை எழுத மற்றும் ஒரு பகுதியை முடிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் எழுதிப் பழகுங்கள். மூன்று மணிநேர தேர்வுக்கு இரண்டரை மணிநேரத்திற்குள்ளாவது எழுதிமுடிக்கும் விதத்தில் திட்டமிடுங்கள்.
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் உங்கள் அணுகுமுறை சரியான பலனை தரவில்லை என்று தோன்றினால் மாற்று அணுகுமுறைகளை முயற்சி செய்யலாம் . உங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட முக்கியமான தேதிகளை எழுதி, அதை எப்பொழுதும் உங்கள் பார்வை படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
படிக்கும் நேரம்
- முதலில் உங்கள் கவனம், விழிப்புணர்வு மற்றும் தெம்பினை கருத்தில் கொண்டு எந்த நேரத்தில் படித்தல் அதிகமான பலன் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் படிக்கும் நேரத்தை தீர்மானியுங்கள். அது அதிகாலையோ, மாலையோ, அல்லது இரவாகவோ இருக்கலாம். ஆனால் அப்படி தீர்மானிக்கும் நேரத்தில் தினமும் படிக்க வேண்டும். அடிக்கடி நேரத்தை மற்றக்கூடாது.
- கடினமான பாடங்களை உங்கள் முழு கவனம் இருக்கும் நேரங்களிலும், எளிமையான பாடங்களை கவனம் குறைவாக இருக்கும் நேரங்களிலும் படிக்கவும்.
- நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் அதன் கடினத்தன்மையின் அடிப்படையில் எப்பொழுது படிக்க வேண்டும் என்பதை நீங்கள் அட்டவணை தயாரிக்கும் போதே தீர்மானிக்க வேண்டும்.
கவனம் சிதறாமல் இருக்க
- படிக்கத்துவங்கும் முன்பு நீங்கள் படிக்க தீமானித்த பாட பகுதியை படிப்பதற்கு தேவையான புத்தகம், வகுப்புரை, மற்றும் இதர உபகரணங்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் இடத்தில் இதுவல்லாது வேறு ஒரு பொருளும் இருக்கக்கூடாது.
- உங்கள் குறிக்கோள், படிக்கும் வழிமுறை, படித்து முடிக்க எடுக்கவேண்டிய முயற்சி ஆகியவற்றை ஒரு முறையாவது ஞாபகப்படுத்திக்கொள்ள சிறிது நேரத்தை ஒதுக்கவும்.
ஊக்கப்பரிசு.
- உங்கள் வெற்றியை கொண்டாட ஏதாவது ஒரு ஊக்கப்பரிசை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். (உதாரணமாக உங்களுக்கு பிடித்த தின்பண்டம், பிடித்த பாடலை கேட்பது முதலியன)
- நீங்கள் படிக்க வேண்டும் என்று தீர்மானித்ததை குறிப்பிட்ட நேரத்தில் படித்து முடித்துவிட்டால் இவற்றை செய்துகொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமின்மையை குறைக்க
- ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதிக பட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மேலே ஒரே பாடத்தை தொடர்ந்து படிக்காதீர்கள். அது உங்களுக்கு சலிப்புதன்மையை ஏற்படுத்தலாம். பாடங்களை மாற்றி மாற்றி படியுங்கள். உங்கள் அட்டவணையும் அவ்வாறே இருக்கட்டும்.
- ஒவ்வொரு அரை மணி நேர படிப்பிற்க்கு பிறகும் இளைப்பாற ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- இந்த இடை வேளையின் போது கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ள பழகுங்கள். மூச்சுப்பயிற்சியும் செய்யலாம். முழுமையாக அந்த அரைமணி நேரமும் உட்கார்ந்து படித்துக்கொண்டு மட்டுமே இருந்திருந்தால் எழுந்து சிறு நடைபயிற்சி செய்து உங்கள் உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment