நினைவாற்றலை அதிகப்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். ஆர். மனோஜ் –
மருத்துவ உளவியல் நிபுணர்- சென்னை
- படிக்கும் பொழுது முழு கவனத்துடன் படிக்கவும்.
- படிக்கும் பொழுது எவ்வளவு புலன்களை உபயோகிக்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் நினைவில் நிற்பது அதிகரிக்கும் என்பதை உணருங்கள். உதாரணமாக மனதளவில் படிக்கும் பொழுது கண்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. உறக்க படிக்கும் பொழுது கண், வாய், காது ஆகிய மூன்று புலங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து எழுதுவதால் நான்காவது புலனான தொடலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் படித்தவற்றை பற்றிய ஞாபகசக்தி அதிகமகும்.
- நீங்கள் படிக்க வேண்டியவற்றை சரியாக திட்டமிட்டு தொகுத்து ஒழுங்குபடுத்திக்கொள்ளவும். ஒரே மாதிரியான பாடங்கள் கருத்துகள் மற்றும் தலைப்புகளை ஒரே குழுமமாக தொகுத்து அதற்கு ஒரு குறிப்பேடு தயாரித்து அதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
- நீங்கள் படிக்கும் பாடங்களை ஏற்கனவே படித்த பாடங்களுடன் இணைத்து பார்த்து இரண்டிற்கும் உள்ள தொடர்பை தெரிந்து அல்லது முடிந்தவரை ஏதாவது தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படிக்கவும்.
- படித்தவற்றை ஒரு தனிபட்ட சூழ்நிலை, இடம், நேரம் அல்லது ஏதாவது ஒரு சிறு சம்பவத்துடன் இணைத்து உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
- நினைவுக்குறிப்புகள், தலைப்புகள் ஒருங்கிணைப்பு, எதுகை மோனை, ஓசைஒழுக்கு பொன்ற உத்திகளின் மூலமும் நீங்கள் படித்தவற்றை கூடுதலாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
- நீங்கள் படித்தது சம்பந்தமான படங்கள், வரைபடங்கள் மற்றும் இதர விஷயங்களை கற்பனை சித்திரங்களாகவோ அல்லது அது சம்பந்தமான நகைச்சுவையான விஷயங்களின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் படித்து முடித்த பாடங்கள் மற்றும் படிக்கவேண்டிய பாடங்களை பற்றிய குறிப்புகளை அடிக்கடி கண்களில் படும் இடங்களில் வைத்துகொள்ளுங்கள்.
- உங்கள் முழு கவனம் தேவையில்லாத செயல்களில் ஈடுபடும் பொழுது (உதாரணமாக பஸ்சில் பயணம் செய்யும் பொழுது) படித்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
- நீங்கள் படித்த பாடங்களை குறித்து சந்தர்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நண்பர்களுடன் கலந்தாய்வில் அல்லது விவாதத்தில் ஈடுபடலாம். நீங்கள் படித்ததை உங்கள் நண்பர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
- கடினமான பாடங்களை பலமுறை படிக்கவும், அதை புரிந்து நினைவில் நிறுத்தவும் அதிக நேரமும், கவனமும், முயற்சியும் தேவை.
No comments:
Post a Comment